சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வடகாடு பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் விஷ்ணு மற்றும் சிவா என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் 2 வாலிபர்களையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.