சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பிராஞ்சேரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் முன்னீர்பள்ளம் பகுதியில் வசிக்கும் குணசேகரன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் குணசேகரன் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குணசேகரனை கைது செய்ததோடு, அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.