சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செலக்கரிசல் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிராம் பாரிக்(38) என்பது தெரியவந்தது.
இவர் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் கிராம் பாரிக்கை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் 3 கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.