Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதாமான செயல்…. தம்பதியினர் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த தம்பதியினர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பாண்டிதுரை, அவரது மனைவி சத்யகலா, குமார் மற்றும் கலியமூர்த்தி என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |