சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே சிலர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கோத்தகிரி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இவர்கள் வ.உ.சி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் பத்திரன் என்பதும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் பத்திரனை கைது செய்தனர். அதன்பிறகு அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.