Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சண்டே மார்க்கெட் செயல்படுவதற்கு தடை….. காரணம் என்ன….? அரசு திடீர் விளக்கம்….!!!!

இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா வருடம் தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவில்லை. இந்த கொரோனா வைரஸ் தற்போது குறைந்ததால் கடந்த புதன்கிழமை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விநாயகர் சதுர்த்தி விழா முடிவடைந்த பிறகு 3 நாட்கள் அல்லது 5 நாட்களுக்கு பிறகு சிலைகளை கடலில் கரைப்பது வழக்கம். அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்கு முடிவு செய்துள்ளனர். இந்த சிலைகளை கடலில் கரைப்பதற்கு அரசு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் பட்டேல் சாலை, அஜந்தா சந்திப்பு, காந்தி வீதி மற்றும் நேரு வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை செயல்படும் வார மார்க்கெட் செயல்படக்கூடாது என நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதோடு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக சண்டே மார்க்கெட் கடைகள் செயல்படக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். எனவே ஞாயிற்றுக்கிழமை அன்று வியாபாரிகள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் சிலைகளை கடலில் கரைப்பதற்கு ஏதுவாக மண் கொட்டி சாய்த்தளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Categories

Tech |