Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சண்டைக்கு அழைத்த அண்டர்டேகர்… அக்ஷய் குமாரின் காமெடியான பதில்…!!!

சண்டைக்கு அழைத்த அண்டர்டேகருக்கு அக்ஷய் குமார் காமெடியாக பதிலளித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கில்லாடியோன் கா கில்லாடி . இந்த படத்தில் பிரபல மல்யுத்த வீரரான அண்டர்டேகரை நடிகர் அக்ஷய் குமார் அடித்து வீழ்த்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. தற்போது இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக அக்ஷய் குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ‘அண்டர்டேகரை தோற்றுவித்தவர்கள் யார் யார் ? கையை தூக்குங்கள்’ என பதிவிட்டு கீழே பிராக் லெஸ்னர், ட்ரிபிள் எச், ரோமன் ரெய்ன்ஸ் ஆகியோருடன் அக்ஷய் குமாரின் புகைப்படமும் இடம் பெற்றிருக்கும் மீம்ஸை வெளியிட்டுள்ளார்.

மேலும் ‘இதில் ஒரு வேடிக்கையான உண்மை என்ன என்றால் மல்யுத்த வீரர் பிரையன் லீ தான் இந்த படத்தில் அண்டர்டேகராக நடித்திருந்தார்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் மல்யுத்த வீரர் அண்டர்டேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘எப்போது உண்மையான சண்டைக்கு வரப்போகிறீர்கள் அக்ஷய்குமார்?’ என கேட்டுள்ளார். இதற்கு அக்ஷய் குமார் ‘கொஞ்சம் பொறுங்கள் என் இன்சூரன்ஸை ஆய்வு செய்துவிட்டு கூறுகிறேன் சகோதரரே’ என காமெடியாக பதிலளித்துள்ளார்.

Categories

Tech |