Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“சண்டைக்கு நீங்க தான் காரணம்” பெட்ரோல் ஊற்றி மாமியாரை கொல்ல முயன்ற மருமகள்….. பரபரப்பு. சம்பவம்….!!!!

மருமகள் தனது மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியநற்குணம் கிராமத்தில் ராமமூர்த்தி- சிந்தாமணி(65) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வேல்முருகன் என்ற மகனும், மலர்க்கொடி என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வேல்முருகன் தனது அக்காள் மகளான சங்கீதா(31) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்த வேல்முருகன் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதால் சங்கீதா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அங்கு உறவினர்கள் சங்கீதாவை சமாதானப்படுத்தி கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சங்கீதா தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை சிந்தாமணி பார்த்து தனது மகனிடம் கூறியுள்ளார். இதனால் எங்களுக்குள் தகராறு நடப்பதற்கு நீங்கள் தான் காரணம் என கூறி தனது மாமியார் மீது பெட்ரோலை ஊற்றி சங்கீதா தீ வைத்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சிந்தாமணியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் சங்கீதாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |