கணவன் மனைவி சண்டையை விசாரிக்க சென்ற காவல் துறையினரின் சட்டையை கிழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருவேற்காடு செல்லியம்மன் நகரைச் சேர்ந்த தேவி என்பவர் தனது கணவர் கார்த்திக் குடிபோதையில் தன்னை அடித்ததாக நேற்று இரவு திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் குடும்பச் சண்டையை விசாரிக்க சென்ற திருவேற்காடு போலீஸ் தலைமை காவலர் தேவராஜ் தேவியின் வீட்டிற்கு சென்று அவரது கணவரை மடக்கி பிடித்துள்ளார்.
அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்த தேவியின் கணவர் கார்த்திக் காவல்துறையினரின் சட்டையை பிடித்து இழுத்து, கிழித்து அவரை தாக்கி கீழே தள்ளி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.