தம்பதியை தாக்கிய டீக்கடைக்காரரை தடுத்த நாடக ஆசிரியர் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் டீக்கடைக்காரரை கைது செய்தார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் அருகே இருக்கும் பங்களாமேடு பகுதியில் முபினுதீன் என்பவர் டீக்கடை நடத்தி வருகின்றார். இந்த நிலையில் சென்ற 6-ம் தேதி வேலூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதி பங்களா மேடு டீக்கடையில் டீ சாப்பிட்டார்கள். அவர்களிடம் டீக்கடைக்கார் தகராறில் ஈடுபட்டு தம்பதியினரை அடித்ததாக சொல்லப்படுகின்றது.
இதை பக்கத்தில் குடியிருக்கும் நாடக ஆசிரியர் தர்மலிங்கம் பார்த்து ஓடி வந்து சண்டையை விலக்கி இருக்கின்றார். அப்போது முபினுதீன் கையால் தர்மலிங்கத்தை தாக்கியிருக்கின்றார். இதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார். இதன்பின் அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை போளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முபினுதீனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.