அஜித்குமார் சண்டை காட்சிகளில் நடிக்கும் போது டூப் நடிகர்களை அவர் பயன்படுத்த அனுமதிப்பதில்லை என தகவல் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், அவருடன் பணிபுரிந்த சக தொழில் நுட்ப கலைஞர் சொல்வது புதுசு.
அந்த தொழில் நுட்ப கலைஞர் ஒளிப்பதிவாளர் வெற்றி தான். இவர் அஜித் நடித்த வீரம், விவேகம், வேதாளம், விசுவாசம் ஆகிய 4 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இது குறித்து பேசிய வெற்றி, விசுவாச படபிடிப்பு காலையில் தொடங்கி விடிய விடிய நடைபெற்றது.
படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினர் சிலரும் ஒரு ஹோட்டலுக்கு சென்று பொங்கல் சாப்பிடுவோம். இதைக் கேள்விப்பட்ட அஜித் மறுநாள் எங்களுக்காக அதிகாலையில் பொங்கல் சமைத்து அவரே பரிமாறினார்.
சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது டூப் நடிகர்களை அவர் பயன்படுத்துவது இல்லை. அவரே நடிப்பார். தனக்கு நடப்பதுதானே டூப் நடிகருக்கும் நடக்கும் என அவர் அதற்கு விளக்கமும் சொல்வார். எல்லோரும் நல்லாயிருக்கணும் என அஜித் விரும்புவார் என வெற்றி தெரிவித்தார்.