வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மதனகோபாலபுரம் ஆரோக்கியா நகரில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான சக்தி பிரசாத்(25) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சக்தி பிரசாத்துடன் அவரது பெற்றோர் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சக்தி வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிகாலை 4 மணி அளவில் சக்தி காணாமல் போனதை கண்டு மணி அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் மகனை தேடிய போது வீட்டிற்கு அருகில் இருக்கும் மாவு மில்லில் சக்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சக்தியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சக்தி பிரசாத்தை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் b