Categories
மாநில செய்திகள்

சதமடித்த தக்காளி…. 300-ஐ தாண்டின முருங்கக்கா….  முடியலடா சாமி…. இதுக்கு காரணம் என்ன…??

தமிழகத்தில் காய்கறிகளின் விலை தொடர்ந்து உச்சத்தை சந்தித்து வருகின்றது. அந்த வகையில் தக்காளி 100க்கு விற்பனையாகிறது. முருங்கைக்காய் 300 ரூபாயை தாண்டி விற்பனை ஆகின்றது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டுக்கு வரத்து குறைவு காரணமாக ஒரு கூடை தக்காளி 2 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தக்காளியின் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ தக்காளி விலை 100 ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது.

ஒரு காலத்தில் வெங்காயத்தின் விலை அதிகமானதால் அதை வைத்து மீம்ஸ் செய்து கொண்டிருந்தது போல, தற்போது தக்காளியை வைத்து மீம்ஸ் செய்து வருகின்றனர். மேலும் தக்காளி இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி, சமைப்பது எப்படி என்று இல்லத்தரசிகள் தேட ஆரம்பித்துள்ளனர். சென்னையில் ஒரு கிலோ தக்காளி மீண்டும் 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதேபோல் கத்தரிக்காய் விலை 100 முதல் 110 ரூபாய்க்கு விற்பனையாகிறது. முருங்கைக்காயின் விலை 300க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை ஏற்றம் இல்லத்தரசிகளை கவலை அடைய செய்துள்ளது. இதனால் ஹோட்டல்களில் இந்த காய்கறிகளை தவிர்த்து வேறு கூட்டுகளை செய்வதற்கு முயற்சி செய்து வருகின்றன.

Categories

Tech |