Categories
கிரிக்கெட் விளையாட்டு

சதமடித்த விராட் கோலி…. இந்திய அணிக்கு பெரிய போனஸ்…. லோகேஷ் ராகுல் ஸ்பீச்….!!!!

ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியானது ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றியடைந்தது. துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலாவதாக விளையாடிய இந்தியஅணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்து குவித்தது. முன்னாள் கேப்டன் விராட்கோலி 1000 நாட்களுக்கு பின் சர்வதேச போட்டியில் சதமடித்து முத்திரை பதித்தார். அவர் 61 பந்தில் 122 ரன்னும் (12 பவுண்டரி, 6 சிக்சர்), கேப்டன் லோகேஷ் ராகுல் 41 பந்தில் 62 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். இதையடுத்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது.

இப்ராகிம் சர்தான் அதிகபட்சம் 64 ரன் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். புவனேஸ்வர் குமார் 5 விக்கெட்டும், அர்ஷ்தீப்சிங், அஸ்வின், தீபக் ஹூடா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணி பாகிஸ்தான், இலங்கையிடம் தோற்றிருந்ததால் ஏற்கனவே இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்துவிட்டது. ஆகவே ஆறுதல் வெற்றி கிடைத்தது. நேற்றைய போட்டியில் கேப்டன் ரோகித்சர்மா ஆடவில்லை. இதனால் லோகேஷ் ராகுல் கேப்டனாக பணிபுரிந்தார். இந்நிலையில் வெற்றி தொடர்பாக ராகுல் கூறியிருப்பதாவது “பெரிய காயம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின் நான் திரும்பி இருக்கிறேன். இத்தொடரில் நாங்கள் நிறைய பாடங்களை கற்றுக்கொண்டோம்.

விராட்கோலி ரன்களை குவிப்பது இந்திய அணிக்கு பெரியபோனஸ் ஆகும். இதன் வாயிலாக அணி மேலும் பலம்பெற்று திகழும். அவர் பேட்டிங் செய்யும் விதம் மகிழ்ச்சி அளித்தது. 2 (அல்லது) 3 இன்னிங்ஸ் விளையாட ஆரம்பித்துவிட்டால் நம்பிக்கை வந்துவிடும். விராட்கோலி 3வது வரிசையில் சிறப்பாக ஆடுவதால் அவற்றில் தொடர்ந்து விளையாடுவார். 3வது பேட்டிங் வரிசையில் அவரால் ரன்களை குவிக்க முடியும்” என்று அவர் கூறினார். சூப்பர் 4 சுற்றில் இன்று நடைபெறும் கடைசிஆட்டத்தில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இந்த இரு அணிகளும் தான் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இதன் காரணமாக இறுதிப்போட்டிக்கான பயிற்சி ஆட்டமாக இது அமையும்.

Categories

Tech |