Categories
கிரிக்கெட் விளையாட்டு

சதம் விளாசிய பட்லர்….. மும்பைக்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான்….  வெற்றி பெறுமா மும்பை….!!!

IPL கிரிக்கெட்டில் 9 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றனர். இவர்களில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சூர்ய குமார் யாதவ் இப்போட்டியில் இடம்பிடிப்பார் என்று ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்த நிலையில், அவர் இப்போட்டியில் ஆடவில்லை.
இந்நிலையில் முதலில் ராஜஸ்தான் அணியினர் களமிறங்கினர். இரண்டாவது ஓவரில் ஜெய்ஸ்வால் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணியினர் 48 ரன்கள் எடுத்து இந்தநிலையில் படிகள் 7 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து பட்லருடன் சாம்சன் ஜோடி சேர்ந்து ஆட ஆரம்பிக்க மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் விளாசினார்.
சாம்சன் 30 ரன்கள் எடுத்த நிலையில் பொல்லார்ட்  பந்து வீச்சில் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து ஒருபக்கம் அதிரடியாக விளையாடிய பட்லர் ஐபிஎல்-ல் தனது 2-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 100 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் அவுட்டானார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணியினர் 8 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்துள்ளனர்.

Categories

Tech |