தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவினர் மற்றும் திமுகவினர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் மக்களுடைய தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல், “பெண்கள் குறித்த நலத்திட்டங்கள் நிறைய எங்களிடம் உள்ளது. அதை இப்போது அறிவித்தால் மற்ற கட்சியினர் காப்பி அடித்து விடுவார்கள். புலியை அடித்துத் துரத்திய வீரப்பெண்கள் வாக்குக்கு பணம் கொடுப்பவர்களையும் அடித்து துரத்த வேண்டும். அது மட்டுமல்லாமல் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்திற்கு கெடுப்பதற்காகவே மக்களிடம் பிரச்சாரம் செய்யும் போது ஆம்புலன்ஸ் அனுப்புகின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.