Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சதித்திட்டம் தீட்டி இங்க பதுங்கி இருந்திருக்காங்க…. ரோந்தில் தூக்கிய காவல்துறையினர்…. மதுரையில் பரபரப்பு….!!!

மதுரையில் பயங்கர ஆயுதங்களை வைத்து கொண்டு பதுங்கியிருந்த 6 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டையிலிருக்கும் காவல்துறையினர் கீழக்குயில்குடியிலிருக்கும் சமணர் மலைப்பகுதிகளில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 6 நபர்கள் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களை வைத்து கொண்டு பதுங்கி இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் கீழகுயில்குடியைச் சேர்ந்த கமல் பாண்டி, மருது பாண்டி உட்பட இன்னும் 3 பேர் என்பது கண்டறியப்பட்டது. இவர்கள் சதித்திட்டம் தீட்டி அங்கு தங்கியிருந்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |