பிரவீன் சரவணன் இயக்கத்தில் சதீஷ் மற்றும் விஜே சுரேஷ் இணைந்து நடிக்கிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
அறிமுக இயக்குனரான பிரவீன் சரவணன் இயக்கத்தில் சதீஷ் மற்றும் சுரேஷ் ரவி சேர்ந்து புதிய படமொன்றில் நடிக்கிறார்கள். இத்திரைப்படமானது நகைச்சுவை திரைப்படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகின்றது. இத்திரைப்படம் குறித்து இயக்குனர் பிரவீன் கூறியுள்ளதாவது, இதை “ஃப்ரி-காம் என்று அழைக்க விரும்புகின்றோம். இத்திரைப்படம் வேடிக்கை நிறைந்த கதை மற்றும் இன்றைய இளைஞர்களை பிரதிபலிப்பதாக அமையும். இந்த கதைக்கு சதீஷ் மற்றும் சுரேஷ் பொருத்தமாக இருப்பார்கள் என நான் உணர்கின்றேன்.
அவர்கள் இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பர்களாக நடிக்கின்றார்கள். தற்போது விஜேவாக பணிபுரிகிறார்கள். இவர்கள் இருவருக்கும் ஜோடியாக மோனிகா சின்னகொட்லா மற்றும் மானசா சவுத்ரி நடிக்கிறார்கள். மேலும் இத்திரைப்படத்தில் கருணாகரன், புகழ், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். படத்தில் அனைவருக்கும் சமமான புதிய வேடங்கள் இருக்கின்றது. படத்தின் படபிடிப்பு சென்னையில் பூஜைக்குப் பிறகு தொடங்க இருக்கின்றது. இத்திரைப்படம் நகரத்தை மையமாக வைத்து எடுக்கப்படுவதால் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்க இருக்கின்றோம்” என கூறியுள்ளார்.