Categories
மாநில செய்திகள்

சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல….. இன்று முதல் 4 நாட்களுக்கு….! வெளியான கட்டுப்பாடுகள்….!!!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலை மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு மாதத்தில் அமாவாசை, பௌர்ணமியை முன்னிட்டு நான்கு நாட்கள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஆவணி மாத பௌர்ணமி வரும் பத்தாம் தேதி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் இன்று பிரதோஷம்

இதனால் இன்று முதல் 11ஆம் தேதி வரை சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நான்கு நாட்களில் காலை 7:00 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் குளிக்கக்கூடாது. பிளாஸ்டிக், எளிதில் தீப்பிடிக்கக் கூடிய எந்த பொருட்களையும் எடுத்துச் சொல்ல கூடாது. கோவிலில் இரவு தங்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |