விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு தாலுகாவில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் சிவகாசி சப்-கலெக்டர் பிரித்விராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆனந்தவல்லி அம்மன் கொலு திருவிழா நடத்த அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் யாரும் மலை மீது தங்குவதற்கு அனுமதி கிடையாது.
எனவே காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வனப்பகுதியில் கோழி, ஆடு ஆகிய உயிரினங்களை பலியிட்டு சமையல் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை மீறி வனப்பகுதிக்குள் அனுமதி இன்றி சென்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.