விருதுநகர் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். நேற்று காலை கோவில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் சிறிது நேரம் சாரல் மழை பெய்ததால் அனுமதி வழங்குவதில் தாமதமானது. இதனை அடுத்து மழை நின்றதும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வனத்துறையினர் கோவிலுக்கு செல்ல பக்தர்களை அனுமதித்தனர்.
இந்நிலையில் பௌர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு இளநீர், விபூதி, சந்தனம், தேன் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனை அடுத்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.