Categories
மாநில செய்திகள்

சதுரகிரி பக்தர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

சதுரகிரி பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.  இந்த கோவிலுக்கு மாதம்தோறும் அமாவாசைக்கு நான்கு நாட்கள், பிரதோஷத்திற்கு நான்கு நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும்.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழையின் காரணமாக நீர்வரத்து அதிகமாக இருப்பதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு கார்த்திகை மாதம் பிரதோஷம் மற்றும் அமாவாசை முன்னிட்டு கடந்த 2-ஆம் தேதி முதல் நாளை வரை நான்கு நாட்களுக்கு பக்தர்கள் மலையேறி சென்று தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று அமாவாசை என்பதால் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி இல்லாததால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

Categories

Tech |