Categories
மாநில செய்திகள்

சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல…. இன்று(ஜூலை 11) முதல் 4 நாட்களுக்கு…. பக்தர்கள் அனுமதி அறிவிப்பு…..!!!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.  இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை 4 நாட்களுக்கு அனுமதி அளித்துள்ளது. பௌர்ணமியை ஒட்டி இன்று (ஜூலை 11) முதல் 15ம் தேதி வரை பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மழையேற அனுமதி உண்டு. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றது. இந்த அனுமதி நாட்களில் மழை பெய்தால் மலையேற தடை விதிக்கப்படும்.

வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை யாரும் கொண்டு செல்லக்கூடாது மேலும் பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது .அதுமட்டுமல்லாமல் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது . பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து தமிழக அரசின் வழிபாட்டு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |