ஈரானில் கடந்த ஆண்டு அக்டோபரில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காதால் அங்கு புதிய அரசாங்கத்தை அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. அதிகபட்சமாக 73 இடங்களை வென்ற ஷியா பிரிவு தலைவர் முக்தாதா அல்-சதரின் கட்சியின் ஈரான் ஆதரவு குழுக்கள் ஆட்சி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அரசியலில் இருந்து விலகுவதாக சதர் நேற்று அறிவித்தார். இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் பாக்தாத்தில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டதால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையில் சதரின் ஆதரவாளர்களுக்கு ஈரான் ஆதரவு குழுவினருக்கும் இடையே நடந்த ஆயுத மோதலில் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதனால் பெரும் பதற்ற நிலவிவரும் நிலையில் யார் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடாது என்று ராணுவத்திற்கு இடைக்கால பிரதமர் முஸ்ஃதபா உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக இலங்கையில் நடந்த சம்பவங்களை போன்று ஈராக் அரசின் அதிகாரப்பூர்வ மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அங்கிருந்து நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்தனர். இதனையடுத்து பாக்தாத்தில் இரு பிரிவினர்களுக்கு இடையே மோதல் தொடர்ந்து வருகின்ற நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. அனைத்து தரப்பினரும் ஆயுதங்களை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கக் கூடிய வகையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக சதர் அறிவித்துள்ளார்.