நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் சமையல் எண்ணெய் ஒரு ஆண்டில் 77 சதவீதம் விலை உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 179 ரூபாய்க்கு விற்ற கடலை எண்ணெய் தற்போது 9 சதவீதம் உயர்ந்து 196 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடுகு எண்ணெய் 132 ரூபாயிலிருந்து 177 ரூபாயாகவும், சூரியகாந்தி எண்ணெய் 128 ரூபாயிலிருந்து 195 ரூபாயாகவும், பனை எண்ணெய் 95 ரூபாயில் இருந்து 130 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது.