சிறுத்தை தோட்டத்திற்குள் புகுந்து நாயை கடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவபுரம், கள்ளியாறு பகுதியில் கடந்த 2 நாட்களாக சிறுத்தை ஒன்று அட்டகாசம் செய்கிறது. இந்த சிறுத்தை மலையடிவார தோட்டத்திற்குள் புகுந்து நாயை அடித்து தூக்கி சென்றது. நேற்று அதிகாலை சிறுத்தை மேலும் ஒரு நாயை கடித்தது. இதனை பார்த்ததும் விவசாயிகள் சத்தம் போட்டதால் சிறுத்தை நாயை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றது.
இதனால் சிறிய காயத்துடன் நாய் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பசிக்கும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.