Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்தான கறுப்பு உளுந்து சுண்டல் … செய்து பாருங்கள் …!!!

கறுப்பு உளுந்து சுண்டல் செய்ய தேவையான பொருள்கள் :

கறுப்பு முழு உளுந்து-ஒரு கப்,
பச்சை மிளகாய்           -2,
இஞ்சி                                -சிறிய துண்டு,
தேங்காய் துருவல்     -3 டேபிள்ஸ்பூன்,
சீரகம், கடுகு                  -தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பில்லை        -சிறிதளவு,
எண்ணெய், உப்பு         -தேவையான அளவு.

செய்முறை :

முதலில் இஞ்சி, பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும், உளுந்தை 8 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, குக்கரில் போட்டு வேக வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, கறிவேப்பில்லை தாளித்து வெந்த உளுந்து, அரைத்த இஞ்சி விழுது, உப்பு சோத்து நன்கு கிளறவும்.அதன் பின்  பச்சை வாசனை போனதும், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். சுவையான கறுப்பு உளுந்து சுண்டல் தயார்.

Categories

Tech |