Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்தான காய்கறி மக்காச் சோள சூப் … செய்து பாருங்கள் …!!!

காய்கறி மக்காச் சோள சூப் செய்ய தேவையான பொருள்கள் :

பெரிய வெங்காயம்                   – 1
காரட்                                                – 2
மக்காச்சோள முத்துக்கள்    – 1/2 கப்
துருவிய கோஸ்                       – 1/2 கப்
ஜவ்வரிசி மாவு                         – 1 டீஸ்பூன்
பட்டாணி                                     – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு                                               – 1/2 டீஸ்பூன்
நறுக்கிய பீன்ஸ்                      – 1/2 கப்
மிளகுத்தூள்                             – 1/2 டீஸ்பூன்
பூண்டு                                        – 4 பல்
சர்க்கரை                                  – 1/2 டீஸ்பூன்

 செய்முறை : 

முதலில் வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் மூன்றையும், சிறிது எண்ணெயில் வதக்கி, நைசாக அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய காய்கறிகளுடன், மக்காச்சோளம், வெங்காய விழுது சேர்த்து 1/2 கப் தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

அடுத்து குழைய விடக்கூடாது. ஜவ்வரிசி மாவை 2 கப் தண்ணீரில் கலந்து கொழகொழவென கண்ணாடி பதத்திற்கு வரும்வரை கஞ்சியாக காய்ச்சவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.

அதன் பின் சூப் சற்று திக்காக இருக்க வேண்டுமானால், 1 டீஸ்பூன் மக்காச் சோள மாவை தண்ணீரில் கரைத்து, அதை சூப்புடன் கலந்து இறக்கவும்.

Categories

Tech |