பயிறு உருண்டை செய்ய தேவையான பொருள்கள் :
முழு பாசிப்பருப்பு – 2 கப்
வெல்லம் – 1கட்டி
துருவிய தேங்காய் – 1 கப்
பால் பவுடர் – 5 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
முந்திரி – 15
முதலில் பாசிப்பருப்பை வேக வைத்து மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். பின்பு வெல்லத்தை பாகு காய்ச்சி வைக்கவும்.அரைத்து வைத்துள்ள பருப்புடன் 2 தேக்கரண்டி பால் பவுடர், துருவிய தேங்காய் மற்றும் சிறு துண்டுகளாக உடைத்த முந்திரி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
அதன் பின் அத்துடன் வெல்லப் பாகு மற்றும் நெய் ஊற்றி உருண்டை பிடிக்கும் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிறகு ஒரு தட்டில் மீதமுள்ள பால் பவுடரைக் கொட்டிக் கொண்டு பிசைந்து வைத்துள்ள பயிறுக் கலவையை எடுத்து உருண்டைகளாக உருட்டி பால் பவுடரில் பிரட்டி எடுக்கவும்.பயிறு உருண்டை தயார்.