ஆப்பிள் விதையால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றிய தொகுப்பு
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதனால் மருத்துவரை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகாது என்று பலரும் கூறுவது வழக்கம். பல சத்துக்கள் ஆப்பிள் பழத்தில் நிறைந்திருந்தாலும் அதன் விதையில் விஷத்தன்மை மிக்க சயனைடு ஒன்று இருக்கிறது. இதனால் ஆப்பிள் பழத்தின் விதைகளை நாம் மொத்தமாக சேர்த்து சாப்பிட்டால் பக்க விளைவுகள் மோசமாக இருக்கும்.
ஆப்பிள் விதையால் ஏற்படும் ஆபத்துக்கள்
ஆப்பிள் விதையை சாப்பிட்டால் செரிமான மண்டலத்தைத் அது சென்றடைந்து சயனைட் விஷமாக மாறி உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுத்தும்.
விதையை சாப்பிடும் போது அது முதலில் சுவாச உறுப்புகளுக்கு செல்லும் ஆக்சிஜனை தடுத்து நிறுத்தி மூளை, இதயம் மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து உயிருக்கு ஆபத்தான சூழலை உருவாக்குகிறது.
தவறுதலாக ஆப்பிள் விதைகளை சாப்பிட்டால் அவர்களது உடம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பும் இருக்கும். ஆனால் சில சமயங்களில் அவர்களுக்கு தலைசுற்றுதல், வாந்தி, மயக்கம், வயிற்றுவலி போன்றவை ஏற்படக்கூடும்.
ஆப்பிள் விதையில் இருக்கும் சயனைடின் அளவானது ஒவ்வொருவரின் உடல் எடைக்கு ஏற்றபடி மாறுபடும்.
மேற்குறிப்பிட்ட இத்தகைய பிரச்சனைகளை தவிர்க்க ஆப்பிள் சாப்பிடும் போது முழுவதுமாக விதைகளை அகற்றி விட்டு சாப்பிடுவது நன்மை பயக்கும். தவறுதலாக விதையை சாப்பிட்டால் உடனடியாக வெளியில் துப்பி விடுவது நல்லது.