Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்தான பீட்ருட் வடை…. செய்து குழந்தைகளுக்கு கொடுங்க …!!!

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் துருவல்          – ஒரு கப்
தேங்காய் துருவல்    – 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு            – ஒரு கப்
துவரம்பருப்பு                – கால் கப், சோம்பு
சீரகம், மிளகு               – தலா அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்        – 4
வெங்காயம்                 – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை            – சிறிதளவு
எண்ணெய்                     – பொரிப்பதற்கு தேவையான அளவு
உப்பு                                  – தேவையான அளவு.

செய்முறை : 

முதலில் பருப்பு வகைகளை முக்கால் மணி நேரம் ஊறவிட்டு, அவற்றுடன் மிளகு, சோம்பு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அடுத்தது அதனுடன் துருவிய பீட்ரூட், தேங்காய் துருவல், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும்.

அதன்பின் வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொரித்தெடுத்தால் சுவையான பீட்ரூட் வடை தயார்.

Categories

Tech |