Categories
மாநில செய்திகள்

“சத்தியமங்கலம் சரணாலயம்”…. தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல…. உயா்நீதிமன்றம் உத்தரவு…..!!!!!

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை (பிப்.10) முதல் மாலை 6- காலை 6 மணி வரையிலும் வாகன போக்குவரத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இவ்விவகாரத்தில் சொக்கலிங்கம் என்பவா்  தாக்கல் செய்துள்ள மனுவில், 2013ஆம் ஆண்டு சத்தியமங்கலம் விலங்குகள் சரணாலயம் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. ஈரோட்டில் உள்ள இந்த சரணாலயத்தில் புலிகள் மட்டுமின்றி சிறுத்தை, யானை, மான், காட்டெருமை ஆகிய விலங்குகளும் இருக்கின்றன.

இந்த சரணாலயத்தின் வழியாக பெங்களூரு செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதி வன விலங்குகள் அடிக்கடி உயிரிழக்கின்றன. இந்த சாலையில் 24 மணி நேரமும் கனரக வாகனங்களும், இலகுரக வாகனங்களும் என்று தினசரி 5 ஆயிரம் வாகனங்கள் வரை செல்கின்றன. கடந்த 2012- 2021 ஆம் வருடம் வரை 8 சிறுத்தைகள், 1 யானை, 71 மான்கள், 55 மயில்கள் என்று 155 வன விலங்குகள் வாகனங்கள் மோதி உயிரிழந்துள்ளது. ஆகவே மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கனரக வாகன போக்குவரத்துக்கும், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பிற வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி,  நீதிபதி டி.பரதசக்ரவா்த்தி போன்றோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வனத் துறை சார்பாக “இந்த தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட ஆட்சியா்  உத்தரவிட்டுள்ளாா். அந்த உத்தரவை மக்கள் எதிா்ப்பு தெரிவித்த காரணத்தால் நடைமுறைப்படுத்தவில்லை.

அதன்பின் சம்பந்தப்பட்டவா்களுடன் கூட்டம் நடத்தி சுமுகத் தீா்வு காண உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நீதிபதிகள், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அமல்படுத்தாததால் ஏற்பட்ட வன விலங்குகளின் இறப்புக்கு வனத்துறை அதிகாரிகளை ஏன் பொறுப்பாளியாக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினா். அதன்பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்கவே வன அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.

ஆகவே அந்த சரணாலயத்தின் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வியாழக்கிழமை (நாளை ) முதல் மாலை 6- காலை 6 மணி வரையிலும் வாகன போக்குவரத்துக்கு தடைவிதிக்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியா் பிறப்பித்த உத்தரவைக் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். மேலும் ஆட்சியா் உத்தரவை இதுவரையிலும் ஏன் அமல்படுத்தவில்லை என்பது குறித்தும் வனத்துறை அதிகாரிகள் விரிவான விளக்கமளிக்க வேண்டும் என்றனா். அடுத்த வழக்கு விசாரணையை வரும் 15- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனா்.

Categories

Tech |