Categories
தேசிய செய்திகள்

சத்தீஸ்கரில் வீரமரணம் அடைந்த 17 பாதுகாப்பு படை வீரர்கள் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி!

சத்தீஸ்கரில் சுக்மா மாவட்டத்தில் நக்சல்களுடன் ஏற்பட்ட மோதலில் வீரமரணம் அடைந்த 17 பாதுகாப்புப் படையினரின் சடலங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் பூபேஸ் பாகல் அஞ்சலி செலுத்தினார். தண்டேவாடா மாவட்டம் எல்மகுண்டா அருகே கோரச்குடா மலைப் பகுதி அருகே பாதுகாப்பு படையினர் சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் பாதுகாப்பு படையினரின் வாகனங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா்.

இதனால் பாதுகாப்புப் படையினா் எதிா் தாக்குதல் நடத்தினர். சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 15 வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த நபர்கள் ராய்ப்பூருக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 17 வீரர்கள் காணாமல் காணாமல் போன நிலையில் தேடுதல் நடவடிக்கையில் துப்பாக்கி சூட்டின்போது மாயமான 17 வீரா்கள் நேற்று சடலமாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில் அவர்களது உடல்கள் கொண்டு வரப்பட்ட நிலையில் அம்மாநில முதலமைச்சர் பூபேஸ் பாகல் அஞ்சலி செலுத்தினார். மேலும் மூத்த அதிகாரிகள், குடும்பத்தினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இந்த தாக்குதலை பிரதமர் மோடி வன்மையாக கண்டித்துள்ளார்.

Categories

Tech |