Categories
மாநில செய்திகள்

சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

தமிழ்நாடு ஓய்வு பெற்ற சத்துணவுஊழியர்கள் நல சங்கத்தின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிலும் குறிப்பாக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் 7,850 அகவிலைப்படி வீட்டு வாடகைப்படி இணைத்து குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும் வயதான ஊழியர்கள் என்பதால் மருந்து மாத்திரை வாங்கி மருத்துவ படியாக 300 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் பண்டிகை முன்பணம் நான்காயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இது குறித்து சங்க நிர்வாகி ஆறுமுகம் அளித்த பேட்டியில், சத்துணவு ஊழியர்களுக்கு அரசு சிறப்பு ஓய்வூதியம் 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தப் பணமும் மாதம் இறுதியில் சரிவர கிடைப்பதில்லை. அதனால் ஊழியர்கள் சாப்பிடக் கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

வெறும் 2000 ரூபாய் ஓய்வூதியத்தை வைத்தே எப்படி வாழ முடியும். எனவே இதனை ஒழுங்கு படுத்த வேண்டும். அரசு எங்களை வஞ்சிக்கிறது. வருகின்ற இருபத்தி ஒன்றாம் தேதி நடைபெறும் சட்டமன்ற மானிய கோரிக்கையில் இது தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து போராட்டம் நடத்துவது உடன் 30ஆம் தேதி உண்ணாவிரத போராட்டமும் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்

Categories

Tech |