Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள்…. வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு…. அதிகாரிகளின் நேரடி ஆய்வு…!!

சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலத்தானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 22 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று சத்துணவு ஆயா காமாட்சி விடுமுறையில் சென்றுள்ளார். இதனால் குட்டூர் பள்ளியில் சமையல் செய்து வந்த சத்துணவு ஊழியர் விஜயா 2 பள்ளி மாணவ மாணவிகளுக்கும் சத்துணவு பரிமாறியுள்ளார். அப்போது காரிமங்கலத்தானூர் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 7 மாணவர்கள் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து அறிந்த பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று சத்துணவு தரம் குறித்து ஆய்வு செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, மாணவர்களுக்கு புளிசாதம் வழங்கப்பட்டுள்ளது. அதன் புளிப்புத் தன்மையால் ஒரு மாணவனுக்கு மட்டுமே வாந்தி ஏற்பட்டுள்ளது. மற்ற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என கூறினர்.

Categories

Tech |