தமிழக அமைச்சரான கீதாஜீவன் தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் சத்துணவு மையங்களுக்கு கொண்டைக்கடலை சத்தான காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது ஜவாஹிருல்லா எம்எல்ஏ சத்துணவுத் திட்டத்திற்கு உயிர்ம விளை பொருட்களை வழங்க அரசு ஆவன செய்யுமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கீதாஜீவன் தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் சத்துணவு மையங்களுக்கு கொண்டைக்கடலை மற்றும் சத்தான காய்கறிகள் வழங்கப்பட்டு வருகிறது.
பத்தாயிரம் மையங்களில் இயற்கை முறையில் காய்கறிகள் பயிரிடப்பட்டு அவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முட்டை வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார். இதற்குப் பிறகு ஜவஹிருல்லா சத்துணவு திட்டத்தில் தேங்காய் துண்டு வழங்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பியதற்கு, அதுகுறித்து அரசு பரிசீலனை செய்யும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.