தமிழகத்தில் தற்போது 43,290 பள்ளிகளில் சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 46 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர் ஒவ்வொரு பள்ளி சத்துணவு மையங்களில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை விவரங்களின் அடிப்படையில் சத்துணவு மையங்களில் உள்ள காலி பணியிடங்களை ஆய்வு செய்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்து அனைத்து புள்ளி விவரங்களும் கோர. இதற்கிடையில் 28000 சத்துணவு மையங்களை அரசு மூட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.
இந்நிலையில் சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 28 ஆயிரம் சத்துணவு மையங்களை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக வரும் செய்திகள் எதுவும் உண்மை இல்லை. காலை உணவுத் திட்டத்தை தொடங்கிய அரசு சத்துணவு மையங்களை எப்படி மூடும்? என்று கேள்வி எழுப்பிய அவர், இதை மக்கள் நம்பவேண்டாம் என்று தெரிவித்தார்.