Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்து மிகுந்த…தட்டப்பயிர் சாதம்…!!

தட்டப்பயிர் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

வடித்த சாதம்                                  – 3 கப்
வேக வைத்த தட்டப் பயிறு     -1 கப்
நெய்                                                    -2 டீஸ்பூன்
கடுகு                                                   – அரை டீஸ்பூன்
பெருங்காயம்                                 –  ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய்                         – 4
கருவேப்பிலை                               – ஒரு கைப்பிடி
அரைத்த  உளுத்தம் பருப்பு     – 2 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள்                                  – கால் டீஸ்பூன்
உப்பு                                                    – தேவையான அளவு

செய்முறை:

முதலில் சாதத்தை வடித்து எடுத்து கொள்ளவும். முந்தின இரவிவே ஊறவைத்த தட்டப் பயிரை மறுநாள் நன்கு வேகவைத்து எடுக்கவும்.

வாணலியில் நெய்  விட்டு கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின்பு அதனுடன்  மஞ்சள்தூள், பொடித்த உளுந்தம்பருப்பு சேர்த்து  நன்கு கிளறவும். மேலும் 1 கப் சாதம், வேக வைத்த தட்டப்பயிறு, தேவையான அளவு உப்பு போட்டு மிதமான சூட்டில்  கிளறி இறக்கவும். ருசி மிகுந்த  சுவையான பயிர் சாதம் ரெடி.

Categories

Tech |