Categories
சினிமா தமிழ் சினிமா

சந்தானத்தின் அடுத்தப்படம் … டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் …!!

நடிகர் சந்தானம் நடித்துள்ள புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் காமெடி கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்து பின் கதாநாயகனாக அவதாரம் எடுத்து மாஸ் காட்டியவர் சந்தானம். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘பிஸ்கோத்’ திரைப்படமும்  ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் தற்போது நடிகர் சந்தானம் நடித்துள்ள புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

‘பாரிஸ் ஜெயராஜ்’ என்ற டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சந்தானம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து போஸ்டரில் ஜனவரி 2021 என்று குறிப்பிடப் பட்டுள்ளதால் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தை ஏ1 திரைப்படத்தை இயக்கிய ஜான்சன் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Categories

Tech |