சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அனகா, ஷிரின் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், முனீஸ்காந்த், சாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் சந்தானம் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடித்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் டிக்கிலோனா படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி நேரடியாக ஜீ 5 ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.