Categories
சினிமா

சந்தானம் நடிக்கும் “கிக்”…. வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த்ராஜ் இயக்கத்தில் “சாண்டா 15” என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து வருகிறார். தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிப் படமாக உருவாகிவரும் இத்திரைபடத்தில் தன்யா ஹோப், ராகினி திவிவேதி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். பார்டியூன் பிலிம்ஸ் படநிறுவனம் சார்பாக நவீன்ராஜ் தயாரிக்கும் இப்படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார்.

அத்துடன் சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதன்பின் நாகூரன் ராமச்சந்திரன் படத்தொகுப்பு செய்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு கிக் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் கவுதம்வாசுதேவ் மேனன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |