ஆந்திரா அரசியலில் களம் இறங்க இருப்பதாக பரவி வந்த வதந்தியை மறுத்து விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் வீரமே வாகை சூடும். இவர் தற்போது லத்தி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்குகின்றார். சுனைனா கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்தை ராணா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது.
இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் உருவாகிவருகின்றது. மேலும் விஷால் மார்க் ஆன்டனி திரைப்படத்திலும் துப்பறிவாளன் திரைப்படத்தை இயக்கியும் நடித்தும் வருகின்றார். இந்த நிலையில் விஷால் ஆந்திர அரசியலில் களமிறங்க இருப்பதாக செய்தி பரவி வருகின்ற நிலையில் இதுபற்றி ட்விட்டரில் விஷால் விளக்கம் தந்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
— Vishal (@VishalKOfficial) July 1, 2022
அதில் அவர் கூறியுள்ளதாவது, ஆந்திர அரசியலில் களம் இறங்க இருப்பதாகவும் குப்பம் தொகுதியில் போட்டியிட இருப்பதாகவும் பரவி வரும் வதந்திகளை கேட்டு வருகின்றேன். இதை நான் முற்றிலுமாக மறுக்கின்றேன். இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இந்த விஷயம் தொடர்பாக யாரும் என்னை தொடர்பு கொள்ளவும் இல்லை. இது எங்கிருந்து கிளம்பியது என்று தெரியவில்லை. எனக்கு படங்கள் மட்டும் தான் நோக்கமாக இருக்கின்றது. அதை தவிர்த்து ஆந்திரா அரசியலில் களம் இறங்கவோ அல்லது சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியிடவோ எனக்கு எந்த நோக்கமும் இல்லை என அவர் அதில் கூறியுள்ளார்.