சந்திரமுகி படத்தின் கதாநாயகி குறித்த செய்தி வெளியாகியிருக்கிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகிய சூப்பர்ஹிட் படம் சந்திரமுகி ஆகும். இப்படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க சில வருடங்களாகவே வாசு முயற்சித்து வந்தார். எனினும் ரஜினி 2ஆம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக 2ஆம் பாகத்தினை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் சந்திரமுகி 2 ஆம் பாகத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அண்மையில் வெளியானது.
பி.வாசு இயக்கக்கூடிய இத்திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். அத்துடன் லைகா நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்க இருக்கிறது. அண்மையில் சந்திரமுகி பாகம் 2-ன் போஸ்டரானது வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சிவாஜிகணேசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வைத்து இருந்த டைட்டில் உரிமையை இப்போது லைகா நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தில் முன்னதாக ஜோதிகா, சிம்ரன், கியாரா அத்வானி உள்ளிட்டோரை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் படத்தின் முக்கிய வேடத்தில் அனுஷ்காவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் ஆண்ட்ரியா அல்லது ராஷி கன்னா ஆகிய இருவரில் ஒருவரை படக்குழு உறுதி செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது.