சந்திரமுகி 2 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது சந்திரமுகி 2 படத்தில் நடிகை லட்சுமிமேனனை ஹீரோயின் ஆக நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இவர் தமிழில் வெளியான சுந்தர பாண்டியன் என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார்.
இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனதால் லட்சுமி மேனனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் நடித்த கும்கி, மிருதன், வேதாளம் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் திடீரென லட்சுமி மேனனுக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. இவர் நடிப்பில் கடைசியாக புலிக்குத்தி பாண்டி என்ற திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.