Categories
ஆன்மிகம் வழிபாட்டு முறை

சந்திர கிரகணத்தை முன்னிட்டு…. பண்ணாரி அம்மன் கோவில் நடை அடைப்பு….. வெளியான தகவல்….!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பண்ணாரியில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. வழக்கமாக கோவில் நடை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அடைக்கப்படும். இங்கு பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். அதிலும் செவ்வாய், வெள்ளிக்கிழமை, பௌர்ணமி, அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

வருகிற 8- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இதனால் மதியம் 12.30 மணி முதல் இரவு 7 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இரவு 7 மணி முதல் 9 மணி வரை பக்தர்கள் சாமியை தரிசித்து செல்லலாம் என கூறியுள்ளனர்.

Categories

Tech |