இன்று இந்திய நேரப்படி பகல் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு முழு சந்திர கிரகணம் முடிவடைகிறது. சென்னையில் மாலை 5.38 மணிக்கு சந்திரன் உதயமாகும் . எனவே முழு சந்திர கிரகணத்தை யாரும் காண இயலாது. ஆனால் 5.38 மணியிலிருந்து மாலை 6.11 மணி வரை சுமார் 40 நிமிடங்கள் வரை கிழக்கு தொடு வானில் பகுதி கிரகணத்தை வரை வெறும் கண்களால் காணலாம்.
இந்நிலையில் கடந்த அக்.25ம் தேதி சூரிய கிரகணம் அன்று வாட்ஸ் ஆப் முடங்கியது போலவே. இன்று சந்திர கிரகணம் நிகழ்வதையொட்டி வாட்ஸ் ஆப் செயல்படாது என்ற தகவல் பரப்பப்படுகிறது. சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்ற நிகழ்வுகளுக்கும், வாட்ஸ் ஆப் முடங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே, இதுபோன்ற போலி தகவலை மக்கள் நம்ப வேண்டாம். இதுபோன்ற தகவல்களை யாரும் பரப்பவும் வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.