சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிபேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் சந்தேகப்படும் படியாக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஜெயராமன் என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் ஜெயராமனை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.