வீட்டிற்குள் புகுந்து நகையை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நாட்டார்மங்கலம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் பழஞ்சநல்லூர் பகுதியை சேர்ந்த ஜோதி(42) என்பது தெரியவந்தது. இவர் வேம்பு என்பவரது வீட்டில் கடந்த 3-ஆம் தேதி 19 கிராம் தங்க நகையை திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து ஜோதியே போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த தங்க நகையை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.