Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சந்தேகப்படும் படியாக நின்ற பெண்கள்….. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

நகை பறிப்பில் ஈடுபட்ட மூன்று பெண்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், வீடுகள் பூட்டி கிடக்கும் கடைகள், ஆகியவற்றை சிலர் நாட்டை விட்டு பணம், நகை உள்ளிட்ட பொருட்களை திருடி செல்கின்றனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் பிரண்டு கலைச்செல்வன் உத்தரவின் படி போலீசார் தர்மபுரி புறநகர் மற்றும் டவுன் பேருந்து நிலையம், பென்னாகரம் ரோடு, பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது 3 பெண்கள் சந்தேகப்படும் படியாக பல்வேறு இடங்களில் நடமாடியது தெரியவந்தது.

இதனை அடுத்து பைபாஸ் ரோட்டில் இருக்கும் தனியார் ஹோட்டல் அருகே நின்று கொண்டிருந்த மூன்று பெண்களையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணை அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த ராணி, திலகா மற்றும் இசக்கியம்மாள் என்பது தெரியவந்தது. இவர்கள் தனியாக செல்லும் பெண்கள் மற்றும் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் இருந்து நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் 3 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த 22 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |