தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் கணேசன்-முனியம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களது 2 மகள்கள் மற்றும் 2 மகன்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கணேசனை முனியம்மாள் கண்டித்ததால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். இதனையடுத்து தம்பதியினர் நீண்ட நேரமாகியும் அறையிலிருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது கணேசனும், முனியம்மாளும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தம்பதியினரின் சடலத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக…